கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் 80 மில்லியன் நிதி பங்களிப்பில் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு அபிவிருத்தி அமைச்சன் செயலாளர் சிவஞானசோதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கிளாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு வாகனம் ஒன்றும் கையளிக்கப்பட்டதுன், மீன்பிடி வள்ளங்களும் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் குறிப்பிடுகையில்,வடக்கு அபிவிருத்தியின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்காக அமைச்சின் செயலாளர் அர்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தாம்தான் தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கு உழைத்ததாக கூறலாம் எனவும், உண்மையில் வடக்கில் தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்காக சிவஞானசோதி அவர்களின் பங்களிப்பு அதிகம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
4500 மேற்பட்ட வீடுகள் முடியும் தருவாயில் உள்ளது.
மேலும் 5000 வீடுகள் வரை மக்களிற்கு வழங்கப்படவுள்ளது. இது தவிர்ந்து பல்வேறு புதிய குளங்கள் அமைக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்மொழியப்பட்டு மேற்கொள்வதற்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களையும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.