மரத்துடன் மோதுண்டு கார் விபத்து – ஐவர் படுகாயம்!
மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு காரில் சென்றுகொண்டிருக்கும் போதே குறித்த நெடுஞ்சாலை வீதியில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதுண்டுள்ளது.
இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சரச்சந்திர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று காயப்பட்டவர்களை மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
விபத்தில் சிக்குண்ட காரினை மீட்டெடுத்து பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள தோடு இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையையும் மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொரிஸார் தெரிவித்துள்ளனர்.