தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது!

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது!

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், அக்காலப்பகுதியில் செய்த தவறை மீண்டும் செய்து தற்போதைய பயங்கரவாதமும் பலமடைய இடமளிக்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி,

”இந்த பயங்கரவாதிகளை பிரதிபலிக்கும் எழுத்துக்களை நான் ஒருபோதும் உச்சரிக்கப் போவதில்லை.

அதனை உச்சரிப்பது அவர்களை நாம் ஏற்றுக் கொண்டதாக அமையும். எனவே, எந்தவொரு அரச தலைவரும் அதனை உச்சரிப்பதில்லை.

இந்த பயங்கரவாதிகளையும், அதனுடன் தொடர்புடையவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை.

இவ்வாறானதொரு தருணத்தில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு செயற்படுவது அனைத்து அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாகும்.

கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவே விடுதலைப் புலிகள் பலம் பெற்றனர்.

எனவே, அக்காலப்பகுதியில் தமிழர்களை பார்த்த அதே கண்ணோட்டத்துடன் முஸ்லிம் மக்களையும் நோக்காதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

முஸ்லிம் மக்களின் மனம் புண்படாத வகையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதன் மூலமே இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net