இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!
ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமிய மத போதகர்கள் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த இஸ்லாமிய மத போதகர்கள் சட்ட ரீதியான பிரச்சினைகள் இன்றி இலங்கை வந்திருந்த போதிலும் விசா அனுமதி காலம் முடிந்து இலங்கையில் தங்கியிருந்ததால், அபராதம் பணம் அறவிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.