பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

சிரியாவை கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு தொடர்பான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளது.

நுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி மையத்தில் கிடைத்த மடிக்கணினியில் இந்த விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த மடிக்கணினியில் பதிவாகியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு, உண்மையான ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு என அரச புலுனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.

அரசாங்க புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பிபில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு பிள்ளைகளின் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அவரது கையடக்க தொலைபேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. பின்னர் அவரது புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர் ஐஎஸ் அமைப்பில் தொடர்பு வைத்திருந்தார் என ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில கண்டுபிடிக்கப்பட்ட கணினியில் உள்ள ஐ.எஸ் அமைப்பினால் குறிப்பிடப்பட்டவரின் பெயரும் பிபிலயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயரும் ஒன்றாகும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த கணினியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரபலம் ஒருவரின் பெற்றோர் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். தங்கள் மகனை பார்ப்பதற்காக சிரியா சென்றிருந்த பெற்றோர் அங்கு ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

சிரியாவில் தனது மகன், மருமகள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்றை அனுபவிப்பதாக விசாரணையின் போது பொற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net