அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!

அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!

அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹறிசன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்டசர் கோட்டையில் வைத்து மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்ட பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, தனது குழந்தையின் பெயரின் முன்னால் எவ்வித கௌரவிப்பு பெயர்களையும் உள்ளடக்கப் போவதில்லை என்றும் அவர் சாதாரணமாக செல்வன் ஆர்ச்சி என்றே அழைக்கப்படுவார் என்றும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் அறிவித்துள்ளனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டப்படுவதற்கு முன்னர் அரச குடும்பத்தின் புதிய வாரிசின் ஒளிப்படம் வெளியிடப்பட்டது.

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியர் தமது வாரிசை நேற்று உலகுக்கு அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net