மாற்றுப்பெயருடன் 6 வீடுகளில் தங்கியிருந்தார் சஹரான்!

மாற்றுப்பெயருடன் 6 வீடுகளில் தங்கியிருந்தார் சஹரான்!

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளான சஹரான் ஹாசிம் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோர் மாற்றுப்பெயர்களுடன் வலம் வந்துள்ளமை குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சஹரான் ஹாசிம் என்பவர் அபு பக்தர் எனும் பெயரிலும் இல்ஹாம் அஹமட் என்பவர், அபு பாரா எனும் பெயரிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டனர்.

குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் தற்கொலைக் குண்டுதாரியான இல்ஹாம் அஹமட் ஆகியோரே இவ்வாறு ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கல்கிஸ்ஸ, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

15 வீடுகளின் உரிமையாளர்களின் வாக்குமூலங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அத்துடன் இந்த இரண்டு குண்டுதாரிகளும் தமது பாவனைக்காக முச்சக்கர வண்டிகள் இரண்டு, ஐந்து கார்களையும் வாடகைக்கு அமர்த்தியிருந்துள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 3489 Mukadu · All rights reserved · designed by Speed IT net