ஹிஸ்புல்லாவுக்கு எதிராக திருகோணமலையின் பல பகுதிகளில் ஹர்த்தால்!
கிழக்கு மாகாண ஆளுநரை நீக்குமாறு கோரி திருகோணமலையின் பல பகுதிகளில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் ஹில்புல்லாவை பதவி நீக்குமாறு கோரி திருகோணமலை நகரத்திலும், சுற்றியுற்ற நகரங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரத்தின் கந்தலாம, சேரநுவர மற்றும் தம்பலகமுல ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் மேற்கொண்ட நிலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பணித்த போது பேருந்தின் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பேருந்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் பயணித்துள்ளார்.
திருகோணமலை மட்டக்களப்பு வீதிகளை மறித்து டயர்கள் எறிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதாக தெரிய வருகிறது.