நாட்டில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

நாட்டில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் சில அசாதாரண சம்பவங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகின.

அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியமையால் பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி, நாட்டில் மேலும் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக கூறி அரசாங்கம் சமூக வலைத்தளங்களை தற்போது முடக்கியுள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப்,வைபர் உள்ளிட்ட சமூக வவைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளின்போதும் அரசாங்கம் உடனடியாக சமூக வலைத்தளங்களை முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1704 Mukadu · All rights reserved · designed by Speed IT net