குளியாபிட்டியவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது!
குளியாபிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.
இதன்போது கைது செய்தவர்களை உடனடியாக பொலிஸார் விடுவிக்க வேண்டுமென கூறி பெரும்பாலானோர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே இன்று காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
மேலும் குளியாபிட்டிய உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.