சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவி கோரும் பொலிஸார்!
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 22ம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று வெடித்து சிதறியது.
குறித்த வாகனத்தில் குண்டுபொறுத்தப்பட்டிருந்த நிலையில், படையினரால் அது செயலிழப்பு செய்யப்பட்ட போது அந்த வான் வெடித்து சிதறியது.
குறித்த வான் புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் நடத்தியவர்களுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், வான் வெடித்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்களின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்ததால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.