நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது!

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது!

நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும் இல்லை.

இதன் காரணமாகவே நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எரிபொருக்களுக்கான விலை சூத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏற்படுகிறது. உலக சந்தையிலும் எரிப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கான திட்டங்களையும் அரசாங்கமே வகுக்க வேண்டும்.

அரச நிறுவனங்களுக்கு செலவிடப்படும் நிதியை விட அதிகளவான நிதியை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது. இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி வரையறுக்கப்படுவது அவசியமாகும்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருபோதும் அதற்கு இடமளிக்க முடியாது. பங்குச் சந்தைகளின் வருமானத்தில் வளர்ச்சி ஏற்படுவதும் வீழ்ச்சியடைவதும் காலத்துக்கு காலம் வேறுப்படும். அதற்க்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Copyright © 0197 Mukadu · All rights reserved · designed by Speed IT net