கனடாவின் தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்கு வகித்துள்ளார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் நடைபெறும், வட அமெரிக்காவின் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரை ஆற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறந்த தொழில்நுட்பத்துறைசார் பணிகளுக்கான முக்கிய மையமாக தற்போது கனடா உருமாறியுள்ளதாகவும், அதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலரும் கனடா நோக்கி ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளும், குடிவரவாளர்களுமே இதற்கு முக்கிய காரணம் என்றும், இவை கனடாவின் பொருளாதாரத்தினையும் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.