இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் பிரித்தானியா பிரதமரிடம் கோரிக்கை.
தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும் இன அழிப்பின் 10 ஆண்டுகள் அடைந்துள்ள போதிலும் இனியும் காலம் தாழ்த்தாது தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானியா அரசு காத்திரமான நடவடிககையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நெறிப்படுத்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா Advocay அணியின் ஒருங்கிணைப்பாளர் பொன்ராசா புவலோஜன் தலைமையில் , அணியின் உறுப்பினர் டக்லஸ் மென்டிஸ் அற்புதம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் இராசேந்திரம் நுஜிதன் ,சந்திரகுமார் பிரேம்குமார் ஆகியோர் இணைந்து 26/05/2019 நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளித்துள்ளனர்.
குறித்த அந்த மணுவில் பிரதானமாக நான்கு கோரிகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பிற குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச நீதி அமைப்பை உருவாக்குதல் வேண்டும்; மேலும் உறுதிப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்காவின் வரலாறு அதன் மக்கள்தொகை மற்றும் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் பல மொழி, பல இன, மதத் தன்மையை அங்கீகரிக்கும் ஒரு அரசியல் தீர்வை ஸ்ரீலங்கா வழங்குவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) அகற்றுவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும் ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இந்த பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) தன்னிச்சையான கைது மற்றும் விசாரணைகள் ஏதுமின்றி தடுத்துவைக்க அனுமதிக்கிறது.
தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் தாயகத்தை சி.ஐ.ஏ. அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தையும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; மற்றும் தாமதமின்றி தமிழ் மக்களை மீள்குடியேற்ற வேண்டும்.
இம்மனுவை கையளித்த பின்அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் ,
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தமிழினத்தின் மீதான போர்குற்றங்களுக்கும், இனப்ப்படுகொலைக்கும் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம் என்றும் அதற்கு பிரித்தானியா அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்
சிங்கள அரசின் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தற்செயலாக நிகழ்ந்ததொரு நிகழ்வல்ல. எதிரப்பாராமல் நிகழ்ந்ததொன்றுமல்ல. அது சிறிலங்கா இராணுவத்தின் அத்துமீறலின் விளைவும் அல்ல. மாறாக இது தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினைக் கருவறுக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுப் புரிந்தவொரு வெறியாட்டமே முள்ளிவாய்க்கால் இனவுழிப்பு.
10வது ஆண்டு நினைவை நாம் தற்போது நினைவு கூருயிருக்கின்றோம்.
இப் பத்தாண்டுகளில் நாம் எவற்றைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் எழுவதனையும் காண முடிகிறது.
பத்தாண்டுகள் கடந்தும் நாம் எமது உரிமைளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பெரிதும் முன்னேறவில்லையே என்ற ஏக்கக் குரல் பலர் மத்தியில் எழுவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.
நாம் இந்த இடத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழினவழிப்பின் ஊடாக சிங்கள அரசு அடைந்து கொள்ள முயன்ற விடயங்களை, அடைந்து கொள்ள முடிந்ததா என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் தமிழினவுழிப்பு மூலம் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விட சிறிலங்கா அரசு முயன்றது. சிறிலங்கா அரசின் கொள்கையான ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் அமுல்படுத்தலாம் என்று எண்ணியது.
சிங்கள அரசின் நிலைப்பாடுகளையும் விருப்பங்களையும் இயல்பாக ஏற்று அதற்கு அடிபணிந்து தமிழ் மக்கள் வாழும் நிலையை ஏற்படுத்த முடியும் என்று எண்ணியது. இவ்வாறான நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களை நிரந்திரமாகத் தோற்கடித்து விடலாம் என்று சிந்தித்தது.தமிழீழழ் என்ற தனியரசு என்ற எண்ணக்கருவை அழித்துச் சிதைத்து விடலாம் என்று எண்ணியது.
ஆனால் பத்தாண்டுகள் கழிந்தும் தான் விரும்பியவற்றை சிறிலங்கா அரசால் அடைந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மக்களைத் தோற்கடிக்கப்பட்ட மக்களாக மாற்ற முடியவில்லை என்பதே நிலைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக தெரிவித்தனர்.
யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்.