பிரித்தானியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!
Huawei நிறுவனம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பிரித்தானியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5G தொலைத்தொடர்புக் கட்டமைப்பை உருவாக்கச் சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு பிரித்தானியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பிரித்தானியா சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Huawei நிறுவனம் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது அனைத்துலக அளவில் உளவு பார்ப்பதாகவும், Huawei நிறுவனம் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் அமெரிக்கா சந்தேகங்களை முன்வைத்துவருகிறது.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை சீனாவும் Huawei நிறுவனமும் மறுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.