வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையான கரையோர பகுதியில், எண்ணெய் தன்மையுடைய கழிவுகள் கரையொதுங்கியுள்ளமையினால் அவதானமாகச் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு நிறத்தில் குறித்த எண்ணெய் கழிவுகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குறித்த கடற்கரையோரத்திற்கு, உடற்பயிற்சிக்காக சென்ற மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, குறித்த கரையோர பகுதிக்கு செல்வபவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்ரகீர்திகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்