தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது!

தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது!

சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பசிக்கு சகோ­தர முஸ்லிம் மக்கள் இரை­யா­கி­வரும் இந்த தரு­ணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆத­ர­வு­டனும் பாசத்­து­டனும் ஆரத்­த­ழு­வு­வ­தா­கவும் அவர்­களின் துய­ரத்தில் பங்­கு­கொள்­வ­தா­கவும் வட மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்­களைப் பல தசாப்­தங்­க­ளாக பலி­கொண்­டு­வரும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் பார்வை தற்­போது முஸ்லிம் மக்­களின் மீது திரும்­பி­யி­ருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மை தாமே ஆளும் அதி­காரக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காகப் பாடு­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை நடை­பெற்­று­வரும் நிகழ்­வுகள் காட்­டு­வ­தா­கவும் அத்­த­கைய ஒரு கட்­ட­மைப்பு மட்­டுமே இரண்டு சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

முஸ்லிம் மக்­களின் அர­சியல், பொரு­ளா­ தார பலத்தை இலக்­கு­வைத்து பௌத்த பேரி­ன­வாதம் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கை­களின் பேரா­பத்தை உணர்ந்­து­கொண்டு வெவ்­வேறு கட்­சி­க­ளையும் சேர்ந்த முஸ்லிம் தலை­வர்கள் ஒன்­று­சேர்ந்து ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்தி இருப்­பது மகிழ்ச்­சியை அளிக்­கின்­றது.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் விசா­ரித்து தேவை­யெனில் தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் குற்றம் செய்­யா­த­வர்­க­ளையும் பெரும்­பான்­மை­யினம் தண்­டிக்க விழை­வது எந்த விதத்­திலும் மன்­னிக்க முடி­யா­தது.

ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் பௌத்த பிக்­குகள் வற்­பு­றுத்தி குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளு­நர்­களை நீக்கும் அளவுக்கு அர­சி­யலில் பௌத்த சங்­கத்தின் செல்­வாக்கு வளர்ந்­து­விட்­டது.

பாதிக்­கப்­பட்ட எமது உற­வு­களின் உண்ணா விர­தங்கள், கோரிக்­கைகள் எவையும் இது­வ­ரையில் தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­க­ளினால் கணக்கில் எடுக்­கப்­ப­ட­வில்லை.

புத்த பிக்­கு­மாரின் செல்­வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜன­நா­யகம் ஆகி­ய­வற்றைக் குழி­தோண்டி புதைக்கும் பேரா­பத்­தான ஒரு நிலை­மை­யினை தோற்­று­வித்­துள்­ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமது நிரபராதி தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு பதிலாக மதவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அழிவுகளை பறைசாற்றி நிற்கின்றது.

Copyright © 1309 Mukadu · All rights reserved · designed by Speed IT net