அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில், கூட்டு எதிரணியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னிணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கு பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்களெனவும் லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற நிலைமைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு.
ஆகையால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றை கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.