ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது.

ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் , சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

தேசிய வீடமைப்ப அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு அமைக்கப்பட்டு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா.ம உறுப்பினர் சி.சிறிதரன் , கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 32 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு 50 ஆயிரம் , ஒரு லட்சம், இரண்டு லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.

அத்துடன் 7.5 லட்சம் பெறுமதியான வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு முதல்கட்ட காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Copyright © 4608 Mukadu · All rights reserved · designed by Speed IT net