Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் செயலி நீக்கப்படவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.
தற்போது Huawei தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலிக்கு பாதிப்புகள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்புக் செயலியை தற்காலிகமாக பயன்டுத்துவதற்கும் வசதிகளுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், புதிதாக வரும் Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் உள்ளடக்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.