கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைகதைக்கான இயல் விருது தீபச்செல்வனுக்கு!

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

அத்துடன் நேற்றைய இயல் விருது விழாவில் 2018 ஆம் ஆண்டு விருது பெரும் படைப்பாளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் சிறந்த புனைகதைக்கான விருதை நடுகல் நாவலுக்காக தீபச்செல்வனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் அபுனைவுக்கான விருது காகம் கொத்திய காயம் என்ற கட்டுரை நூலுக்காக உமாஜிற்கும் சிறந்த கவிதைக்கான விருது சிறிய எண்கள் தூங்கும் அறை என்ற கவிதை நூலுக்காக தமிழகக் கவிஞர் போகன் சங்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்திலிருந்து தமிழுக்கு பீரங்கி பாடல்கள் என்ற நூலை மொழி பெயர்த்த இரா.முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலக்கிய சாதனைக்கான விருதுகளை கல்யாணி ராதாகிருஷ்ணன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Copyright © 7430 Mukadu · All rights reserved · designed by Speed IT net