வவுனியாவில் லொறியொன்று குடைசாய்ந்ததில் ஏழு பேர் படுகாயம்!

வவுனியாவில் லொறியொன்று குடைசாய்ந்ததில் ஏழு பேர் படுகாயம்!

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்திற்கு இலக்கானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றி கொண்டு பயணித்த லொறியே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net