சிறுவர் தினத்தில் ரூம்போட்ட சிறுமி! காதலனும் கைது!
சர்வதேச சிறுவர்கள் தினமான கடந்த முதலாம் திகதி 12 வயது சிறுமியை ஹொட்டலுக்கு அழைத்துச்சென்ற இளைஞனையும் ஹொட்டல் உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி அதே பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் வேலை செய்யும் 22 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சிறுமி தனது தாயின் தொலைபேசி ஊடாக காதலனுடன் நீண்ட நாட்கள் தொடர்புகொண்டு வந்துள்ளார்.
காதலனின் வேண்டுகோளுக்கமைய சிறுமி முதலாம் திகதி அக்குரஸ்ஸ நகரிற்கு வந்துள்ளார். சிறுமி தனது காதலனை அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தித்துள்ளனர்.
இருவரும் சந்தித்த பிறகு பங்கம என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொட்டலுற்கு இளைஞன் சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் நிஷங்கவிற்கு கிடைத்த இரகசிய தொலைபேசி அழைப்பிற்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கம பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த ஹொட்டலில் சிறுமியையும், குறித்த இளைஞனையும் கைது செய்ததுடன் ஹொட்டல் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சிறுமியிடன் விசாரணைகளை மேற்கொண்டபோது,
சிறுவர்கள் தினம் என்பதால் பாடசாலை சீருடையில் வரவேண்டாம் என அதிபர் கூறியதாகவும், அதனால் கலர் உடை உடுத்திக்கொண்டு பாடசாலை செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமி தனது காதலனைச் சந்திக்கச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தில் இருவரும் பேசுவதற்கு நல்ல இடம் இல்லை என்பதால் தான் தனது காதலன் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.