பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு – விசாரணை ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜெயராஜ் விஷ்ணுராஜ் இதனைத் தெரிவித்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பிரமிலா கோணவல முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமையவே, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகளின் நிறைவில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.