விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை!
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ரஜினி, கமல் இருவருமே அரசியலில் பிரவேசித்து மட்டுமன்றி அதில் கமல் கட்சி தொடங்கி அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சில் அரசியல் சாயம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என கமல் ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கமல், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கூறியதாவது,
“விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆர்வம் இருந்தால் வரலாம், வரவேற்பேன்.
இந்தியாவில் இப்போது உள்ள பிரச்சனை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.