ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!
ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களுடன் கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு விஜயம் செய்தநிலையில்
ஊற்றுப்புலம் பகுதியில் பத்தொன்பது மில்லியன் ஒப்பந்த தொகையில் ஆரம்பிக்கப்பட்ட குளம் அமைக்கும் பணியினை வன வளத்தினைகளம் இடையூறு செய்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் நீர் தட்டுப்பாடு நிலவும் எமது கிராமத்துக்கு நீர் கொண்டு வருவது தடைப்படுபதகாவும் அக் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் வனவள அதிகாரிகளின் பிரச்னையை சீர்செய்து குளத்தினை அமைக்க ஆவனை செய்யுமாறு போராட்டம் ஒன்றினை செய்திருந்தனர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு அவர்களுக்குபதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்
அத்துடன் சுதந்திரக் கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரையும் குளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தவுகளை அனுப்புமாறு பிரதி விவசாய அமைச்சர் பணித்ததற்கு அமைவாக நேற்று பிற்பகல் குளம் அமைக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றே அமைச்சருக்கு தரவுகளை அனுப்பியுள்ளனர்
எத்ர்வரும் திங்கள் கிழமைக்குள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது