புதிய வீட்டுத்திட்டங்களை வழங்குவது தொடர்பில் ஆராய இந்திய குழு கிளிநொச்சிக்கு விஜயம்.
புதிய வீட்டுத்திட்டங்களை வழங்குவது தொடர்பில் ஆராய இந்திய குழுவொன்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
குறித்த குழுவினர் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தனர்.
கிளிநாச்சி மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள், அவை முன்னெடுக்கப்பட்ட வகைகள் தொடர்பிலும், ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பிலும், குறித்த குழுவினர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த குழுவினருடனான ந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் அரசாங்க அதிபரிடம் வினவினர்.
இன்று விஜயம் மேற்கொண்ட குழுவினர் கிளிநாச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள், அவற்றின் முறைகள் தொடர்பில் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு 16ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் தேவையாக உள்ளமை தொடர்பில் அவர்களிடம் தான் குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டார்.
முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் 18 மாதங்களில் நிறைவு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த குழுவினர் குறிப்பிட்டதாகவும், குறித்த வீட்டு திட்டங்கள் அமைப்பது தொடர்பில் அராய்வதற்கே தாம் வந்ததாகவும், ஆய்வு செய்ததன் பின்னர் மீண்டும் சந்திப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அனுசரணையோடு கிடைக்கும் வீட்டு திட்டத்துடன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கனிசமான வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் இதன்புாது ஊடகங்களிற்கு தெரிவித்ததுடன், அவ்வீட்டு திட்டங்களை கிளிநாச்சி மாவட்ட செயலகமும், பிரதேச செயலகங்களுமே நேரடியாக கண்காணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எமது மாவட்டத்தில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகின்றது. அவற்றை தீர்பதற்கு நாம் தொடர்ந்தும் பல்வேறு வழிகளை சிரமங்களிற்கு மத்தியில் குடிநீரினை வழங்கி வருகின்றோம்.
இந்த நிலையில் 700 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதற்காக பூநகரி குளம் என்ற திட்டம் வரையப்பட்டு உள்ளது.
குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் குறித்த குழுவினர் ஆராய உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து குறித்த குழுவினர் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் நேரடியாக பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.