69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தின் அணிவகுப்பு
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்வு ஓன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா, மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் இன்று காலை ஆரம்பமான இராணுவத்தின் அணிவகுப்பானது மன்னார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து நகரின் ஊடாக மூன்றுமுறிப்பு சந்தியில் இராணுவ தலைமையகம் முன்றலில் நிறைவடைந்தது.
இந்த அணி வகுப்பில் நிகழ்வில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.