சுவிட்சர்லாந்தில் தீ விபத்து – இருவர் பலி! இருவர் படுகாயம்!
சுவிட்சர்லாந்தில் St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், தீ விபத்து காரணமாக குறித்த உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் எதனையும் வெளியிடாத அந்நாட்டு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.