மீள்கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமானங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வட மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் யாழ். விரசிங்கம் மண்டபத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமானங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை.
ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.