கிளிநொச்சி பூநகரி குளம் அமைப்பது தொடர்பில் நேற்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர் சிலருடன் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது!
கிளிநொச்சி பூநகரி பகுதியில் சிறு குளங்களை இணைத்து பாரிய நீர் தெக்கமாக அமைப்பது தொடர்பில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது.
700 மில்லியன் செலவில் குறிதத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் வருகை தந்திருந்த இந்திய குழுவினர் வினவியதாகவும், அத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த திட்டம் அமையப்போகும் இடம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நேரடி கள விஜயம் மேற்கொண்டு குறித்த குழுவினர் ஆராயவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இன்று காலை 9 மணியளவில் குறித்த குழுவில் இடம்பிடித்திருந்த இருவர் மற்றும் கிளிநாச்சி பிரதி நீர்பாசண பணிப்பாளர் எஸ் சுதாகரன் உள்ளிட்ட குழுவினர் குறித்த திட்டம் அமையபோகும் பகுதியினை நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது குளத்தின் அபிவிருத்திக்காக வகுக்கப்பட்ட திட்டங்களும் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது,