பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ளாரா?
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இராஜினாமா குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தார் மீதான கொலைச் சதித்திட்டம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை நிலையே இராஜினாமாவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.