வடமேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!
வடமேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கிணங்க, குறித்த மாகாணசபையின் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்படவுள்ளது.
இதுவரை மேலும் 4 மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றின் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தததுடன், ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
மேலும், 3 மாகாணசபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் நிறைவடையவுள்ளது.