பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்ற ஒபாமா
பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ”பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாகுவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது” என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் எந்த பாதையில் செல்வது என்று எடுக்கும் முடிவு, இன்றைய அமெரிக்கர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால், இதில் தமக்கும் ஆர்வங்கள் இருப்பதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று கோரும் செயற்பாட்டாளர்கள் அதிபர் ஒபாமாவை பாசாங்கு செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
இன்னுமொரு பத்திரிகையில் எழுதிய லண்டன் மேயர் போரிஸ் ஜோண்சண், அதிபரின் கருத்து புரியாதது, ஒவ்வாதது என்று விபரித்துள்ளார்.
பிபிசி