காங்கிரஸ் உடனிருந்து கொண்டு ஸ்டாலின் அவசரநிலை பற்றி பேசுவதா!
காங்கிரஸ் கட்சியுடன் இருந்து கொண்டு நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை என்று பேசுவதா என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சட்டதிட்டத்திற்கு அமைவாகவே அனைத்து செயற்பாடுகளும் நடைபெறுகின்றது. எவரும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படவில்லை என கூறினார்.
ஆனால் ஸ்டாலின் போன்றவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர் என தமிழிசை இதன் போது தெரிவித்தார்.
மேலும், அறிவிக்கப்பட்ட அவசரநிலையினை அறிவித்த காங்கிரஸ் கூடவே இருந்துகொண்டு மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேச கூடாது எனவும் ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் பா.ஜ.க நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பெட்ரோல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.