esports championship: பிரெண்டன் லே சம்பியன்!

esports championship: பிரெண்டன் லே சம்பியன்!

இவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்பி பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு, இரசிகர்கள பல கோடி…

பர்முயுலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதில் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வர்.

இந்த அற்புதமான விளையாட்டை இன்றும் நேசிக்கும் இரசிகர்கள் பலரும் உள்ளனர். ஆனால் இந்த கார்பந்தயத்தில் பங்கேற்பதற்கு அதிக அனுபவம், அதிக பயிற்சிகள், நுணுக்கங்கள் என ஏராளமான தகமைகள் வேண்டும்.

இதனால் பெரும்பாலானோரால் இந்த கார்பந்தயத்தில் பங்கேற்பது இயலாத காரியமாகவுள்ளது. ஆனால், இந்த கார்பந்தயத்தில் பெரும் இன்பத்தை வேறு வழியில் பெற்றுக்கொள்ள தற்போது இதற்காக விஷேடமான வேர்சுவல் ஓடுதளத்தில் விளையாடும் வகையிலான கேம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விளையாட உலகெங்கிலும் உள்ள பலரும் போட்டிக் போட்டுக் கொண்டிருந்தாலும் அதுவும் சிலருக்கு மட்டுமே சாத்தியமாகின்றது.

இதுவும் நிஜ பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு நிகராக நடத்தப்படுகின்றது. F1 esports championship என அறியப்படும் இந்த போட்டி, நேற்று லண்டனில் விளையாட்டு பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடைபெற்றது.

இதில் முன்னணி அணிகளை சேர்ந்த பலரும் தங்களது அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டனர். மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இப்போட்டியில், பிரித்தானியாவின் பிரெண்டன் லே, மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று F1 esports championshipஇன் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

19 வயதான பிரெண்டன் லெய்ன், பர்முயுலா-1 கார்பந்தயத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அணியான மெர்சிடஸ் பென்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கினார்.

இவர், அபுதாபியில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற F1 esports championship தொடரில் சம்பியன் பட்டம் வென்றார்.

அதன்பிறகு, அவுஸ்ரேலியா மற்றும் சீனா கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, ஹெட்ரிக் வெற்றியை பதிவுசெய்தார்.

ஹங்கேரியன் மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான டேனியல் பெரெஸ்னாய்யை, 27 புள்ளிகளால் பின்தள்ளி, பிரெண்டன் லெய்ன் வெற்றிபெற்றார்.

இதில், பிரெண்டன் லெய்ன் 68 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும்,, டேனியல் பெரெஸ்னாய் 41 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், ராஸ்முஸன் 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த தொடரை பொறுத்தவரை, பர்முயுலா-1 கார்பந்தயத்தில் பங்கேற்கும் முன்னணி பத்து அணிகளில், பெரார்ரியை தவிர்ந்த 9 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இதில் பந்தய வீரர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர், இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர்களான வெற்றிப் பரிசிற்காக போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டித் தொடரின், அடுத்த சுற்றுக்கள், எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் நவம்பர் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Copyright © 9525 Mukadu · All rights reserved · designed by Speed IT net