ரணில் விக்ரமசிங்கவிற்கும் மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் இந்திய தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.