கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் வழிநடத்தலில் இன நல்லிணக்க அடையாளமாக 11 பேர் கணணி பயிற்சி சான்றிதழ் இன்று வழங்கி வைக்கப்பட்டது
கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் வழிநடத்தலில் இன நல்லிணக்க அடையாளமாக 11 பேர் கணணி பயிற்சி சான்றிதழ் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள காமினி சென்டரில் குறித்த பயிற்சி 2 மாதங்கள் இடம்பெற்றன.
குறித்த கணணி பயிற்சியை நிறைவு செய்த 11பேருக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த படைப்பிரிவினரால் சமூக பணி முன்னெடுக்கப்பட்டது, இலவசமாக கணணி பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின்போது சிங்கள மொழியில் தமது கணணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலு்ம, சிங்கள மொழி மூலம் எழுத்து பிரதிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி காமினி சென்டரில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரிய அவர்கள் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இவ்வாறான மொழி,சமய,இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை கிளிநொச்சி படை தலைமையகத்தின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.