புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றம்

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றம்

தற்போது வெளியான தரம் ஐந்து புலமை பிரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றகரமான நிலையினை அடைந்துள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயத்தின் நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இவ்வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 2723 மாணவர்களில் 1998 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அதனடிப்படையில் சித்தி வீதம் 73.37 ஆக காணப்படுகிறது.

கடந்த வருடம் 55.77 வீதமாக காணப்பட்ட கிளிநொச்சியின் சித்தி வீதம் தற்போது மேற்படி நிலைக்கு உயர்ந்துள்ளது.

அதேவேளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் கணிப்பீட்டின் படி கடந்த வருடம் 3102 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 225 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

இது 7.25 வீதமாக காணப்பட்டது. இதன் மூலம் கிளிநொச்சி மாவட்டம் 25 மாவட்டங்களில் 21 வது இடத்தில் காணப்பட்டது.

ஆனால் இவ்வருடம் 2723 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 306 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

இது 11.24 வீதமாக காணப்படுகிறது. இதன் மூலம் கிளிநொச்சி மாவட்டம் 25 மாவட்டங்களில் எட்டாவது மாவட்டமாக முன்னேறியுள்ளது.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள 99 கல்வி வலயங்களில் கிளிநொச்சி கல்வி வலயம் பல இடங்கள் முன்னேறி 78 இடத்தில் காணப்படுகிறது.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் 18595 மாணவர்கள் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதில் 13987 மாணவர்கள் 70 புள்ளிக்க மேல் பெற்றுள்ளனர் இதன் படி சித்தி வீதம் 75.22 வீதமாக காணப்படுகிறது.

கடந்த வருடம் 62.52 வீதமாக இந்த நிலைமை காணப்பட்டது. இதன்படி வடக்கு மாகாணம் ஒன்பது மாகாணங்களில் கடந்த வருடமும் இவ்வருடமும் எட்டாவது மாகாணமாக காணப்படுகிறது. கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் காணப்படுகிறது.

ஆனால் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் கடந்த வருடம் 10.93 வீதமான மாணவர்களும், இவ்வருடம் 12.02 வீதமான மாணவர்களும் பெற்றுள்ளனர் இதன் மூலம் ஒன்பது மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த இரண்டு வருடமும் வடக்கு மாகாணம் இரண்டவாது இடத்தில் காணப்படுகிறது.

முதலாவது இடத்தில் வடமேல் மாகாணம் காணப்படுகிறது இவ்வருடம் இதன் மூதம் 12.19 ஆகும் கிழக்கு மாகாணம் கடந்த இரண்டு வருடங்களிலும் எட்டாவது இடத்தில் காணப்படுகிறது.

மேற்படி ஆய்வு ரீதியாக தகவல்களை இலங்க பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net