பஸ்ஸிலிருந்து கேரளா கஞ்சா மீட்பு
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றிலிருந்து கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கிணங்க வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பஸ்ஸை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டபோதே பொதி செய்யப்பட்டிருந்த பையொன்றில் 9 கிலோகிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைபற்றியுள்ளன்.
எனினும் சந்தேக நபர் எவரையும் பொலிஸார் கைதுசெய்யவில்லை. என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.