யாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை!
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டிய கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய வன்முறையாளர்களை இலக்குவைத்து கடந்த வாரம் திடீர் சுற்றிவளைப்பினை கொக்குவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் சோதனை இடம்பெறுகிறது.
நகர் பகுதியில் இருந்து செல்லும் காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கை வாள்வெட்டு குழு மற்றும் வன்முறை குழுக்களை இலக்கு வைத்தே இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.