இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!
இந்தியா, பாகிஸ்தான் மீது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் அதற்குப் பதிலடியாக இந்தியா மீது நாங்கள் பத்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இலண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிப் கஃபூர், ‘சமீபத்தில் பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடந்துள்ளதாகவும், அங்கு பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், ஆனால் பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த நல்ல மாற்றங்கள் குறித்து எந்த வெளிநாட்டு ஊடகங்களும் எழுதவில்லை எனவும் குறை கூறினார்.
பாகிஸ்தானை எப்போதும் எதிர்மறையாக சித்தரிப்பதை மாற்றி இனிமேலாவது நல்ல விஷயங்களையும் எழுத வேண்டுமெனவும் ஆசிப் கஃபூர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.