கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் கணனிக்கூடம் இன்று மாணவர் பாவணைக்கு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் பாடசாலை முதல்வர் பெருமாள் கணேசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திரையுலக தயாரிப்பாளர்களான பாரதிராஜா, தயாரிப்பாளரும் நடிகருமான பாக்கியராஜ், இளம் நடிகர்கள் மற்றும் பா.ம உ சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லண்டனில் உள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் 1.5 மில்லியன் நிதி உதவியுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கணனிகூடம் இன்று மாணவர் பாவணைக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த கட்டடத்தினை தென்னிந்திய திரையுலகினர் திறந்து வைத்தனர்.