ஆடையின்றி வவுனியா வடக்கு காட்டுக்குள் உலா வந்த ஆசாமிகள்…!
பெண் ஒருவர் வரும்போது ஆடையில்லாமல் நின்ற ஆசாமிகள் இருவர் ஆட்களை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வடக்கு புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் சன்னாசி பரந்தனுக்கு முன்பாகவுள்ள காட்டுப்பகுதியில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதுடன், பெண் ஒருவர் சிறுவனையும் அழைத்துக்கொண்டு நெடுங்கேணி பகுதியில் இருந்து புளியங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இடைவெளியில் ஆள்நடமாட்டம் அற்ற காட்டுப்பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் முற்றிலும் ஆடை இல்லாமல் வீதி கரையில் நின்றுள்ளனர்.
அவர்களை கண்டதும் குறித்த பெண் பயத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
அந்த சமயம் வீதியால் சென்ற ஏனையோரும் வந்தமையால் இரு இளைஞர்களும் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும் காட்டிற்குள் சென்றுதேடிய போதும் அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக தெரிவித்தனர்.
குறித்த இருவருக்கும் 17,18 வயது இருக்கலாம் என அவர்களை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் சென்ற பாதையில் சென்று பார்த்தபோது பெண்களின் உள்ளாடைகளும் அவ்விடத்தில் கிடந்தமை குறிப்பிடத்தக்கது.