இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சித் தகவல்!
இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கமைய ஒக்டேன் 87 அல்லது குறைந்த ஒக்டேன் ரக எரிபொருள் வகை ஒன்றை அடுத்த மாதம் சந்தையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையை விடவும் மிகவும் குறைந்த விலையில் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
புதிய எரிபொருள் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமன்றி, மோட்டார் சைக்கிள்களுக்கும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய புதிய எரிபொருள் திட்டம் வெற்றி பெறும். . எதிர்வரும் மாதத்தில் புதிய எரிபொருள் சந்தையில் அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துதுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் எரிபொருளின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் எரிபொருள் மக்களுக்கு கிடைத்த பெரும் நிவாரணமாக அமையவுள்ளது.
இலங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களின் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் சாரதிகளுக்கும், மக்களுக்கும் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.