இலங்கையின் பல பகுதிகளில் ஏற்படவுள்ள ஆபத்து!
இலங்கையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அடையாளம் கண்டுள்ளது.
நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் மண்சரிவு ஏற்படும் ஆபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நிலையத்தின் பதில் இயக்குனர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இலங்கையில் வீடு நிர்மாணிக்கும் போது உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களில் மண் சரிவு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய அவ்வாறான 18 ஆயிரம் இடங்கள் ஆராயப்பட்டுள்ளது. அதில் 15 ஆயிரம் இடங்களில் ஆபத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த இடங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கையில் மண்சரிவு ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.