அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் டுபாயில் ஆரம்பமானது.
இதில் நாணசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில், பகர் சமான், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் தலா 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில், அவுஸ்ரேலியா அணி சார்பில் நதன் லயன் 4 விக்கெட்டுக்களையும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 145 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆரேன் பிஞ்ச் 39 ஓட்டங்களையும், மிட்சல் ஸ்ட்ராக் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் மொஹம்மட் அப்பாஸ் 5 விக்கட்டுக்களை வீழ்த்த, 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். தொடர்ந்து 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும், பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், 2 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில், பகர் சமான் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, அசர் அலி, 54 ஓட்டங்களுடனும், 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாதிய நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில் 3 ஆம் நாளில் மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 120 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
மேலும் இதில் பாக்கிஸ்தான் அணி சார்பில் பாபர் ஆசாம் 99 ஓட்டங்களை, சர்ஃப்ராஸ் அகமட் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் நாதன் லயன் 4 விக்கெட்களையும், மார்னஸ் லபுஷங்கே 2, மிட்செல் மார்ஷ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தல ஒரு விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் 3 ஆம் நாளில் 538 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்ரேலிய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.