வவுனியா – ஓமந்தை பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!
வவுனியா – ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று அதிகாலை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களே 1670 போதைவில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே சட்டவிரோதமாக போதைவில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் அவர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.