இராணுவத்தை கும்பலாக சிறையில் அடைப்பேன்!
தவறு செய்தது இராணுவத்தினராக இருந்தாலும் அவர்களை கும்பலமாக சிறையில் அடைப்போம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினராக இருந்தாலும், தொகை கணக்கில் சிறையில் அடைப்பதற்கு தான் உட்பட அரசாங்கம் பின்வாங்காது என அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்வதற்காக, லசந்த, தாஜுடீன், எக்னெலிகொட போன்றோரே வாக்குகளை கொண்டு வந்தார்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
லசந்தவின் கொலையாளியை கண்டுபிடிப்பது எங்களுக்கு கடமையில்லையா? லசந்த விக்ரமதுங்க, கீத் நோயார் போன்றோர் தான் எங்களுக்கு வாக்குகளை தேடி கொடுத்தார்கள். வேறு யாரும் அல்ல.
நாங்கள் தாஜுடீன், லசந்த போன்றோரை கொலை செய்தவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவோம். எக்னெலிகொட போன்றோரை கடத்தியவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அனுப்புவோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.