கிளிநொச்சி பவர் மீடியாவின் ஏற்பாட்டில் தாயக கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது
கிளிநொச்சி பவர் மீடியாவின் ஏற்பாட்டில் தாயக கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுகிளிநொச்சியில் இடம்பெற்றது.
நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு நேற்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் தென்னிந்திய சினிமா துறையில் வல்வை தேசம் என்ற திரைப்படத்தில் வில்லன் தோற்றத்தில் தோற்றி சர்வதேச விருது பெற்ற டேவிட் யுவராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன், பா ம உறுப்பினர் சி.சிறிதரன், வ.மா சபை உறுப்பினர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வடக்கு கிழக்கில் உள்ள கலைஞர்கள் துறைசார்ந்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மண்ணை பிறப்படமாக கொண்டு தென்னிந்திய சிிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் தோற்றி சர்வதேச விருது பெற்ற டேவிட் யுவராஜன் சிறிதரன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இசை, குழந்தை நட்சத்திரம், இயக்கம், பாடகர், பாடகி உள்ளிட்ட கலைஞர்கள் 18 பேர் இன்று கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
நிகழ்வில் உரையாற்றிய சிறிதரன்,
ஈழத்தில் கலைஞர்களின் படைப்புக்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பில் குறிப்பிட்டார்.
உரையாற்றிய கரைச்சி பிரதேச சபை தவிசாயளர் வேழமாலிகிதன் குறிப்பிடுகையில்,
ஈழத்தில் கலைஞர்கள் தமது படைப்புக்களை வெளிப்படுத்துவதில் பாரிய இடையூறான பயங்கரவாத தடுப்பு சட்டம் காணப்படுகின்றது. குறித்த சட்டம் காரணாக தமது உள்ளத்தில் உள்ள பல்வேறு படைப்புக்களை வெளிக்கொண்டுவர முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக படைப்பாளர்கள் தமது படைப்புக்களை, ஆக்கங்களை உருவாக்க முடியாதுள்ளது.
அங்கங்களை இழந்தவனின் கதை, கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவனின் கதை, சிறை கூடுகளில் விச ஊசி ஏற்றப்பட்டவனின் கதை என பல்வேறு உள்ளத்தின் குமுறல்களை வெளிக்கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.